மழை மேகம் ஏந்திய வானத்தை பல கேள்விகளுடன் உற்று பார்த்தேன் !
மழையில் விழுகின்ற துளி ஒன்றாவது என் கேள்விக்கு விடையோடு வராதா என்று !
குளிர் காற்று மனதிற்கு மிக அவசியமான அன்பாக வருடும் தென்றல் ஆனது !
காற்று வரும் திசையில் எதாவது ஒரு முலையில் என் தொலைந்துபோன அழகான நாட்கள் திரும்பி வர ஏங்கினேன் வராது என்று தெரிந்தும்!!!
உறைந்த கண்களோடு அசைவற்ற நின்ற நான் என் சகோதரன் மகளின் செல்ல அதட்டலில் திரும்பினேன் ---கள்ளமற்ற சிரிப்பு என் தொலைந்து போன நாட்கள் திரும்பி வரும் என்று நம்பிக்கை தந்தது --வானத்தை நோக்கினேன் அவளுடனும் நம்பிக்கையுடனும் !!!
idhuvum super nga.. chancae illa.. ivalo tamil kavidhai varuma ungaluku.. semaya irundhichi.. - suresh
ReplyDelete