---மகாகவி பாரதியார்---தமிழ் மண்ணில்
பிறந்த ஒவ்வொரு மனிதனும் மறக்கக்கூடாத மாமேதை ,சில நாட்களுக்கு முன்னர் நண்பர் வீட்டுக்கு சென்ற பொது அவரின் 6 வயது மகன் விளையாட்டாக என்னிடம் தன் பள்ளிகூடத்தில் மாறுவேஷ போட்டியில் தான் பாரதியார் போல் வேடம் அணிந்த புகைப்படத்தை பெருமிதத்தோடு காண்பித்தான் ,,நான் கேட்டேன் இவர் யாரு என்று தெரியுமா கண்ணா --அதற்கு அவன் சிறு பிள்ளை என்று நிருபிப்பது போல் "இவரு நம்ம சுதந்திரத்துக்கு ஆங்கிலேயர்க்கு எதிராக போராடின வீரரு தானே மாமா "--ஆம் என்று தலையசைத்தேன் --மனதிற்குள் இளம் வயதில் இவரை பற்றிய என் எண்ணங்கள் ஓடியது ---அவற்றில் சில
சாதாரண வீரன் இல்லை இந்த "முண்டாசு கவிஞன் "--சக்தி வாய்ந்த குர்மையான எழுத்துகளால் இந்த பிரபஞ்சத்தையே திரும்பி பார்க்க வைத்த புரட்சி தமிழன் ஆயிற்றே --இன்று உள்ள சமுதாயத்திற்கு இந்த மாமேதையை பற்றி சில தகவல்கள் மற்றுமே தெரிகிறது --எழுத துடிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பெருமையாக ஏற்க வேண்டிய ஒப்பில்லா முன்னோடி , ஜாதி வெறி பிடித்து தலை விரித்து ஆடுகின்ற எம் சமுதாயம் திரும்பி பார்க்க வேண்டிய லட்சிய தமிழன் --வயதை எண்ணி வாழ்கையை நகற்றும் சோம்பேறிகளின் சவுக்கடி சான்று-- இவரின் வாழ்க்கை வெறும் 39 வருடங்களே --ஆனால் செய்த புரட்சி -வாழ்ந்த வீர வாழ்க்கை --இவ்வுலகம் இருக்கும் வரை அழியாதது !!
எனது இளம் வயதில் பாரதியார் மீது ஏற்பட்ட வியப்பு வாழ்வின் கடைசி வரைக்கும் இருக்கும் --நான் படித்த வாழ்க்கை வரலாறுகள் வெகு சில ---அதில் திரு சுந்தரம் அவர்களின் புத்தகம் மிகவும் முக்கியமானது --பாரதியார் பற்றியது ,எனது சிறிய வருத்தம் மாறி வரும் காலத்தினால் பாரதியார் போன்ற மேதைகளின் வாழ்க்கை வரலாறு வெறும் புத்தகங்களாக நூலகத்தில் இருந்துவிட போகிறதே என்று தான் !!
மறக்கக்கூடாத அந்த மாமேதையின் வாழ்க்கை குறிப்புக்கள் சில
* 11 டிசம்பர் 1882 எட்டயபுரம் என்ற இடத்தில் பிறந்தார்
* 7 வயதில் தாயும் தந்தையும் இழந்தவர் ,15 வயதில் செல்லம்மாள் அவர்களை மணந்தார்
* 4 வருடங்கள் காசியில் பின்னர் ஆசிரியராக பணிபுரிந்தார்
* இளம்வயதில் தமிழ் மீது தீர தாகம் கொண்டவராக அறியப்பட்டார் ,இளங்கோவடிகள் ,கம்பன் ,திருவள்ளுவர் இணையாக பேசப்பட்டார் ,,இந்தியாவின் சுதந்திரத்தின் மீது தீராத தாகம் கொண்டவராக திகழ்ந்தார் ,தாம் ஒரு இந்தியர் பின்னரே தமிழன் என்று மார் தட்டி சொல்லிய மேதை !!
* தமிழ் மொழி எம் தாய் என்று பெருமை பொங்க பறை சாற்றியவர்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"
புலமையாக ஆங்கிலம் ,ஹிந்தி சமஸ்க்ரிதம் ,பெங்காலி போன்ற பல மொழிகளை அறிந்தவராயியுனும் தமிழ் மீது தீரா பற்று கொண்டவராக இருந்தார்
* சாதிகளின் அவ நம்பிக்கைகளை ஒழிக்க கடுமையாக போராடினார் --
" ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே "
( We shall not look at caste or religion, All human beings in this land - whether they be those who preach the vedas or who belong to other castes - are one)
* 1908 பிறகு எண்ணற்ற போரட்டங்களை பல இடங்களில் ,நிறுவினார் ,,திரு திலக் ,திரு ,ஆரோபிண்டோ ,திரு கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை போன்ற சக சரித்திர நாயகர்களின் துணையோடு ஆங்கிலேயரை வீறு கொண்டு எதிர்த்தார்,
* "ஸ்வராஜ்" --முறையை திடமாக நம்பினார் --இளம் வயது மக்கள் தாங்க முன்னுக்கு வந்து உயிர் தியாகம் செய்ய கூட அச்ச படகூடாது என்று இளைஞர் சமுதாயத்தை விழிப்படைய செய்தார்
* "வந்தே மாத்திரம் ","எந்தையும் தாயும் " "ஜெயா பாரத் "போன்ற சுதந்திர கவிதைகளை அச்சிட்டு இலவசமாக மக்களின் விளிபுனர்விற்காக வழங்கினார்
* "1912 இல் பகவத் கீதை பற்றி தமிழில் கருத்துகளையும் மற்றும் அதன் மூலம் தனது படைப்புகள் "கண்ணன் பாட்டு ","குயில் பாட்டு ,மற்றும் "பாஞ்சாலி சபதம்" எழுதினார் .
* 1918 ஆங்கிலேயர் கைது செய்யப்பட்டு சிறையும்
சென்றார்
* 1919 ,1920 இல் காந்திஜியை சந்தித்தார்
* 11 செப்டம்பர் 1921 இல் மறைந்தார்
பாரதியாரின் படைப்புகளில் சில
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே.
இந்தியாவை பற்றி பெருமையாக எண்ணற்ற கவிதைகளை எழுதி உள்ளார்
மன்னு மிமய மலையெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே
இன்னறு நீர்கங்கை யாறெங்களாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூலிது போல
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
பொற்றுவ மிதை யெமக்கிலை யீடே---
" தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்? நான் கவலையை ஒழித்தேன். ஆதலால் எப்போதும் வாழ்வேன். ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்."
அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய மாமேதையின் இறுதி சடகின் போது இருந்தது மொத்தம் 14 நபர்களே !!!
பாடல்களின் தொகுப்புகள் எழுத எண்ணற்ற பக்கங்கள் தேவை படும் ,மகாகவி பாரதியார் போன்ற மாமேதைகள் இனி பிறப்பது அரிது --சரித்திரம் போற்றிய அகிலமே பாராட்டிய அற்புத மனிதர் ,,இந்திய வரலாற்றில் மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர் ,புரட்சியாளர்,எழுத்துகளில் விண்ணையே தொட்ட அதிசய மனிதர் --வருங்காலம் மறக்க கூடாத சரித்திர நாயகன் --என்றுமே நானும் பாரதியை போல தமிழன் என்று பெருமையை தரும் "முண்டாசு கவிஞன் "-மகாகவி பாரதியார் --உம்மை மறவேல் என்றுமே !!!!!!
( Written with references from books and net and endless admiration for this great pioneer of tamil poems --Special thanks to my Tamil Teacher Dharmanathan Sir without whom i would have never loved my language as i do now --Thanks Sir )
No comments:
Post a Comment