"கிங்மேக்கர் " என்று அழைக்கப்பட்ட "கல்வி தந்தை", ஒப்பில்லாத தலைவர் ,தன்னலமற்ற மக்கள் நலனுக்காக வாழ்ந்த ஒரு மிக பெரும் மாமேதை , விருதுநகரில் பிறந்து இந்தியாவே வியந்து பார்த்த தன்னிகரற்ற மாமனிதர் ,"கருப்பு காந்தி "என்று மக்கள் அன்போடு அளித்த லட்சிய திருமகன்!!
என் தந்தை காமராஜர் அவர்களை சந்தித்த நிகழ்வு ;-
* இன்று என் தந்தையிடம் "அப்பா இன்று காமராஜர் பிறந்த நாள் "என்றேன் ,என்
தந்தை தன சிறுவயதில் திரு காமராஜ் அவர்களை கண்ட பொழுதை நினைவு கூறினார்
,அப்பொழுது தம்பு செட்டி சாலையில், சென்னையில் ,திரு காமராஜ் அவர்கள் திரு
ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்
,,அதற்குப்பின் நடந்த கூட்டத்தில் மக்கள் கூட்டம் கம்மியாக இருந்தது
,மேடையில் பேசி முடித்து இறங்கினார் காமராஜர் ,,என்னிடம் வந்து தலையில் கை
வைத்து " என்ன செய்கிறாய் தம்பி என்றார் படிக்கிறேன் ஐயா என்றேன்---
நன்றாக படிக்கச் வேண்டும் என அன்போடு இரண்டு நிமிடம் பேசி விட்டு சென்றார்
--தலைவர் என்றால் அவர் தானப்பா என்றார்"
கல்விக்கண் திறந்த மேதை
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று
கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச்
சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார்
காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி
கேட்டான் சிறுவன்.
“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர்
கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில்
கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி
இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே
அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க
வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய
உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து
ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச்
கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய
திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள்
திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது
என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம்
ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
காமராஜர் அவர்களை பற்றி சில தகவல்கள் ;-
* காமராஜர் அவர்களின் தந்தையார் திரு குமாரசுவாமி நாடார் ,தாயார் சிவகாமி
அவர்கள் ,விருதுநகரில் பிறந்த அவர் படிப்பின் சிறந்தவராக விளங்கவில்லை
,தந்தையின் திடீர் மரணம் காரணமாக படிக்கச் திணறிய காமராஜரை தன் நகைகளை விற்று படிக்க வைத்தார் அவர் தாயார் .
* தன் மாமாவின் துணி கடையில் படிப்பை விட்டு வேளைக்கு சென்றார், ஜாலியன் வால பாக் நிகழ்வே அவரின் வாழ்கையின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது
,அப்பாவி மக்களை கொன்றுகுவித்த சம்பவம் அவரை பாதித்தது ,அரசியல்
நிகழ்வுகளில் பங்குபெற ஆரம்பித்தார் ,காந்திஜி அவர்களின் நடைமுறையில்
பெரிதும் ஈர்கபெற்று அவரின் பாணியை பின்பற்ற ஆரம்பித்தார் .
* தன் குருவாக திரு சத்யமூர்த்தி அவர்களை ஏற்றுகொண்டார் ,சத்யக்ரஹ
போராட்டத்தின் பொது முதல் முறை சிறை சென்றார்,6 மொத்தம் முறை சென்று
வந்தார் ,
* காந்திஜி காமராஜர்
அவர்களிடம் பல சுதந்திர விழிப்புணர்ச்சி நிகழ்சிகளை நடத்துமாறு
கேட்டுகொண்டார்,சுதந்திரம் பெற்ற பின் தனது குரு திரு சத்யமூர்த்தி காலம்
சென்ற பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக (1953 -64) வரை பணி ஆற்றினார் .
* பல நூல்களை படித்து தம்மை தாமே படிப்பில் மேன்படுத்தி கொண்டார்,கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்பிய ஒப்பில்லா மனிதர் , முதல்
அமைச்சராக இருந்த பொது சொந்த தாய் தன்னுடன் இருந்தால் அது அதிகார
துஷ்ப்ரயோகம் என்றும் மக்களின் நலனுக்க தாயை சொந்த மண்ணுக்கு அனுப்பிய
தன்னலம்மற்ற தலைமகன் .
* தன்னை
தோற்கடித்த கட்சியின் தலைவர் திரு அண்ணாதுரை அவர்கள் வீடு தேடி வந்து
வருத்தம் தெரிவித்ததை அன்போடு எற்றுகொண்ட் பண்பாளர் ,இரண்டு முறை இந்திய
பிரதமர் பதவி தேடி வந்த போதும் மறுத்தவர் ,எனவே கிங் மகர் என்ற பேரை
பெற்றார் .
* அப்போது இந்திய
பிரதமர் திரு நேரு அவர்களால் இந்தியாவிலே சிறந்த ஆட்சி பெற்ற மாநிலம் என்று
காமராஜர் ஆட்சி செய்த மெட்ராஸ் (அப்பொழுது) குறிபிட்டார்
* தன இளம் வயதில் நாட்டுக்காக ,உழைப்பேன் கல்யாணம் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டவர் அதை தன இறுதி வரை கடைபிடித்தார் ,
காமராஜர்
அவர்களின் வரலாறு வருகால சந்ததியர் நினைவில் இருக்கவேண்டிய மிக முக்கிய
பதிவேடு ,,தனற்காக எதுவும் ஆசை படாமல் தன வாழ்நாளையே நாட்டிற்காக
அர்பணித்த உன்னத மனிதர் ,லட்சாதி லட்சம் பிள்ளைகளின் துயர் தொடைத்தவர் ,தன்
தாயை விட தாய்நாடே முக்கியம் என எண்ணிய மாமனிதர் ,பல சரித்திரம் படைத்த கருப்பு
காந்தி ,பதவி மக்களுக்கு நல்லது செய்யவே என உணர்த்திய லட்சிய புருஷர்
,தனக்கென எதுவுமே இல்லாமல் துய்மையான வாழ்க்கை வாழ்ந்து மண்ணுலகை விட்டு
பிரிந்தார் ,,மாறி வரும் உலகில் மறக்க கூடாத வாழ்க்கை வரலாறு ,,இவ்வுலகம்
இருக்கும்வரை ,காற்று வீசும் வரை,பேச பட வேண்டிய சரித்திர புகழ் பெற்ற
மனிதர் திரு காமராஜர் அவர்கள் .அதுவே அந்த மாமேதைக்கு செலுத்தும் மிக
பெரும் கௌரவம் .
" வெளியில் செல்லும் போது விளக்கை அணைத்து விட்டு செல்லுங்கள் "
அக்டோபர் 2,1975
யில் --- பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் இறுதி
வார்த்தைகள் தனது உதவியாளர் வைரவன் அவர்களிடம் கூறியது .
அன்று அணைந்த விளக்கு மறுபடியும் மீண்டும் எரிய வில்லை என்பதே வருத்தமான உண்மை
--ஏனென்றால் இன்னொரு காமராஜர் பிறக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது
--வாழ்க செயல் வீரரின் வாழ்க்கை வரலாறு இந்த பூமி இருக்கும் வரை !!
( Everything writtten from what i personally read in books and internet --any historical inaccuracies is highly regretted as this is my personal write up on one of the greatest politicians India has ever seen )